| குரும்பசிட்டி நலன்புரி சபை - கனடா ஊரவர்க்கு அவசர உதவி.... |
|
|
|
| Written by Administrator |
| Friday, 05 February 2010 01:00 |
|
எம் ஊரவர்க்கு! குரும்பசிட்டி நலன்புரி சபை – கனடா கடந்த சில நாட்களாக அவசரமான நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளது இங்குள்ளவர்கள் யாவரும் அறிந்ததே. வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து நிர்க்கதியாக வந்து சேர்ந்துள்ள எமதூரவர்க்கு உதவுவதற்கான முயற்சியில் பல கருணை உள்ளம் கொண்ட மக்களின் உதவியினால் சில தினங்களிலேயே ஏறத்தாழ 4500 கனேடிய டொலர்கள் வரை திரட்ட முடிந்துள்ளது. இது உண்மையில் சந்தோக்ஷப்படவும் பெருமைப்படவும் வேண்டிய விடயமாகும். இதில் இன்னோர் விடயம் என்னவென்றால் எமதூரைச் சாராதோர் கூட தாமகவே முன்வந்து உதவியிருக்கின்றனர். இத்தொகையை இன்னும் உயர்த்துவதற்காக எம்மவர்களின் உதவியை கனடா-நலன்புரி சபை நாடி நிற்கின்றது. நொந்து போயிருக்கும் எம்மவரின் மனங்களிற்கு இதமான வார்த்தைகள் ஆறுதலைத் தரும் என்பது உண்மையே. ஆயினும் சகலதையும் இழந்து நிற்கும் எம் ஊர்மக்களுக்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளே இன்று அவசரமாக தேவைப்படுகிறது. இந் நிதிசேகரிப்பில் இங்கு உதவிப்பணம் பெற்று வாழும் நிலையிலும் எமது முதியவர்கள் இவ்விடயத்தில் காட்டும் அக்கறை எம்மை நெகிழ வைக்கிறது. இந் நிதி குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக பாதிப்புற்ற மக்களுக்காக அனுப்பப்படுவதால் இவை எவ்வாறு எவரெவர்க்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதென்ற விபரங்களை கிராம அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து பெற்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் அறியத் தருவோம். அங்கே அல்லலுறும் மக்களுக்கு நீங்களும் சிறுதொகையாயினும் குரும்பசிட்டி நலன்புரி சபையினூடாக பங்களிக்க விரும்பின் பின்வரும் தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
(2). இ.குகமூர்த்தி : +1905-948-9826, (3). யசோ அரவிந்தன் : +1416- 208-9208 நலன்புரி சபை - கனடா. |













